skip to main |
skip to sidebar
சிம்பு சுத்தி சுத்தி அடிக்கிறார்
விண்னைத் தாண்டி வருவாயா படம் வெற்றிக்கு பரபர வென ஏறும் என்று எதிர்பார்த்த சிம்புவின் க்ராப், லிங்குசாமியா சற்று சறுக்கியது என்னவோ உண்மை. சிம்புவை தன் படத்திற்காக புக் செய்துவிட்டு காக்கவிட்டார் லிங்குசாமி. மேலும் சொல்லாமல் கொள்ளாமல் சிம்புவை விட்டு ஆர்யாவுடன் படத்தை ஆரம்பித்துவிட்டார் லிங்கு. இதில் டென்ஷன் ஆன சிம்பு லிங்குக்கு எதிராக அறிக்கை எல்லாம் விட எல்லாமே புஸ்ஸாகிப்போனது.
இதற்கிடையில் கே.வி ஆனந்தின் “கோ” படத்தில் புக் செய்யப்பட்டார் சிம்பு. ஆரம்பம் முதலே டைரக்டருக்கும் சிம்புக்கும் முட்டிக்கொள்ள அதிலிருந்தும் கழன்டு கொண்டார் சிம்பு.
ஒருகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய சொந்தபடமான “போடா போடி”யை தூசு தட்டி சரத் மகள் விஜயலட்சுமியுடன் லண்டனில் சுட ஆரம்பித்தார். இதற்கிடையே “வானம்” வர போடா போடியை மீண்டும் கிடப்பில் போட்டுவிட்டு வானத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
வானம் பலவாறாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே லிங்கு ஆர்யா வுடன் படத்திற்கு வேட்டை என்று பெயர் சூட்ட, சிம்பு வரிந்து கட்டிகொண்டு தன் படத்திற்கு வேட்டை மன்னன் என்று பெயர் சூட்டினார், அதோடு சரி பிறகு படம் சூட்டிங்க் போகவே இல்லை. வானம் பிப்ரவரி 14 வரும் என்று சொல்லி அதும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிற்து.தற்ப்போது வேட்டை மன்னன் ஆரம்பிக்கும் தேதியை அறிவித்திருக்கிறார் சிம்பு, வானம் முடியும் தருவாயில் இருப்பதாகவும் அது முடிந்ததும் போடாபோடியை முடித்துவிட்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வேட்டை மன்னன் ஜக ஜரூராக ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அறிவிப்புகள் எப்போதும் முடிவதில்லை பார்க்கலாம்.
2010-2011 www.christosebastin.blogspot.com
No comments:
Post a Comment