Saturday, February 12, 2011

லிப் டு லிப் முத்தத்திலும் ஒரு புதிய சாதனை

மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது.

‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து தூள் கிளப்பினார். பாலிவுட் மட்டுமல்லாமல் கோலி, டேலி, மாலி என அனைத்து ‘வுட்’களும் இந்த சாதனையை பாராட்டிக் கொண்டிருந்தது. இந்த சாதனையையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது புதுமுக ஜோடி. ‘ஏ சாலி ஜிந்தகி’ (அட என்னடி வாழ்க்கை) என்பது படம். டைரக்டர் மிஷ்ரா.

அருணோதய் சிங் ஹீரோ. அதிதி ராவ் ஹீரோயின். இணை பிரியாத காதல் ஜோடிகள் கேரக்டர். இவர்களுக்குள் அடிக்கடி செல்லமாக சண்டை நடக்கும். ஒவ்வொரு சண்டையின்போதும் தவறாமல் ‘லிப் டு லிப்’. இப்படி மொத்தம் 22 ‘சண்டை’ காட்சிகளில் 22 லிப் டு லிப். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்களாம். ‘‘இரு ஜோடிகளின் ஊடலுக்கு பிறகு உடல் ரீதியாக இணையும் சுகத்தைவிட முத்தம் தந்துகொள்வது சூப்பர் சுகம். அதை வெளிப்படுத்தவே இக்காட்சிகள்’’ என்று விளக்கம் சொல்கிறார் டைரக்டர் மிஷ்ரா.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com