Saturday, February 19, 2011

குலோப் ஜாமூன் ...

தேவையான பொருட்கள்:-

மில்க் பவுடர்- 2 கப்

மைதா -1/2கப்

பால்-1/4கப்

பட்டர்- 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்

எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு



ஜீரா தயாரிக்க;-


சீனி-3கப்

தண்ணீர்-3கப்

ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ்

1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும்.



பிறகு ஒரு பவுலில் மில்க் பவுடர்,மைதா,பேக்கிங் பவுடர்,ஆகியவற்றை நன்கு கலந்து அதில் பட்டரை உருக்கி ஊற்றி பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும்.மாவு உதிரியாக தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்

அதனை சிறிய உருண்டைகளாக பிளவு இல்லாமல் உருட்டி வைக்கவும்

எண்ணையை லேசான தீயில் சூடாக்கவும்.மிதமான தீயில் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்தெடுக்கவும்.

ஜீரா சூடாக இருக்கும் போதே பொரித்த உருண்டைகளை அதில் போடவும்.45 நிமிடங்கள் ஊறவிடவும்.

சுவையான் ஜாமூன் ரெடி

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com