லிபியாவுடனான அனைத்து தொடர்புகளையும்துண்டித்தது பெரு
லிமா: ஆப்ரிக்காகண்டத்தை சேர்ந்த லிபியா நாட்டில் நடைபெறும் கலவரத்தை அடுத்து அந்நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஆலன் கார்சியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: லிபியா நாட்டின் அதிபர் கடாபி நாட்டின் தலைவராக இருந்து வழி நடத்தும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவிக்காக மக்களின் மீது ராணுவத்தை ஏவி அவர்களை அடக்க நினைக்கிறார். அந்நாட்டு மக்கள் ஜனநாயகத்தை விரும்புகிறார்கள் அதற்கு கடாபி மதிப்பளிக்க வேணடும்.மேலும் மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக அவர்களின் மீது அடக்குமுறை கையாளுவதால் லிபியா நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் பெரு துண்டித்துக்கொள்கிறது என தெரிவித்துள்ளார். லிபியாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதல் நாடு பெரு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment