பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான்.
ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது.
அதனால், 'எந்திரன்’ படத்தின் அட்வான்ஸ்டு ரீ-மேக்தான் ரா.1 என்ற கிண்டல் பேச்சை அடித்துத் தூள் தூளாக்கும் வெறியுடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக். பெரும் பட்ஜெட் படம் பற்றிய சிறு துளித் தகவல்கள்!
தனது 'ரெட்சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்’ மூலம், மனைவி கௌரியுடன் இணைந்து ஷாரூக் கானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் திரைக்கதைக்கும் சார்தான் பொறுப்பு!
சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் என்ற வகையில், 'ரா-1’, 'எந்திரன்’ படங்களுக்கு இடையில் ஏகப்பட்ட ஒற்றுமைகள். ரஜினி போலவே சயின்டிஸ்ட், சூப்பர் ஹீரோ (ரோபோ) என்று ஷாரூக்கும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் ஹீரோவின் பெயர் ஜி-ஒன்!
சும்மா செக்ஸி ஹீரோயினாக மட்டும் வந்து போகாமல், பவர் ப்ளே கேரக்டர் கரீனா கபூருக்கு. ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்கத்தான் திட்டம். ஆனால், ஐஸ் ஆர்வம் காட்டவில்லையாம்!
படத்தில் ஜாக்கி சானுக்கு என்று ஸ்பெஷல் ரோல் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார் ஷாரூக். திரைக் கதைச் சுருக்கம், ஜாக்கியின் ரோல் பற்றிய விளக்கம், ஆக்ஷன் அதிரடி கள் பற்றிய தகவல்களை எல்லாம் ஜாக்கி சானுக்கு அனுப்பிவிட்டு, நீ...ண்ண்ண்ட நாள் காத்திருந்திருக்கிறார். ஆனால், கடைசியில் 'தேதி இல்லை நண்பா’ என்று ஜாக்கி சான் கைவிரித்துவிட, 'டாம் வு’ என்னும் சீன நடிகரை நடிக்க வைத்திருக்கிறார் ஷாரூக்!
பின்னணி இசைக்காக மட்டும் ஜெர்மன் நாட்டு இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மரை அழைத்து வந்திருக்கிறார்கள். பாடல்களுக்கு இசை, பாலிவுட்டின் ஹிட்இரட்டை இசையமைப்பாளர்கள் விஷால் - சேகர்!
படத்தில் இடம்பெறும் ஒரு ஸ்பெஷல் ராப் பாடலுக்காக மட்டுமே ஐந்து கிலோ எடை குறைந்திருக்கிறார் கரீனா. செம மசாலா குத்தாட்டமாக இருக்குமாம்!
ரா ஒன் படத்தின் படங்கள் மற்றும் காணொளி காண ......

No comments:
Post a Comment