Wednesday, February 16, 2011

இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி மீதான வழக்கு


  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அவர்களை விசாரிக்க மூன்று பெண் நீதிபதிகளை கொண்ட முழு அமைக்கப்பட்டுள்ளது
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்
  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அந்த நாட்டின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்காரர்


இத்தாலிய பிரதமர் சில்வியோ ‌பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டடங்களுக்கு எதிராகப் பெண்கள் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய செய்தி அறிந்ததே.

தங்கள் பிரதமரின் சல்லாப சரசங்களால் சர்வதேச அரங்கில் இத்தாலி நாட்டின் கவுரவம் குறைந்து விட்டதாக அப்பெண்கள் வருந்திக் கூறினர். அதிகார பலத்தை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அப்பெண்கள் முறையிட்டனர்.

பெர்லுஸ்கோனி மீது சிறுவயதுப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீது, சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டது, மற்றும் திருட்டு வழக்கில் கைதான பெண் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தன் அதிகாரத்தைத் துஷ்பிரயேகம் செய்தது ஆகிய 2 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு மிலன் மாநகர நீதிமன்றத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது



இத்தாலி நாட்டு பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் காமகளியாட்ட லீலைகளுக்கு எதிராக இத்தாலி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல் ஜசீரா தொலைகாட்சி இதைப் படம் பிடித்துக் காட்டியது
நேற்று தலைநகர் ரோம், டிரையன்ட், பாரி, வெனிஷ், பலர்மோ உள்ளிட்ட இத்தாலி நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பேரணி நடத்தினர்.

“பெண்மைக்கு மதிப்பு கொடு, “செக்ஸ் லீலை நிறுத்து” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய
அட்டைகளைஏந்தியபடி சென்றனரர்.

நேபிள்ஸ் நகரில் நடந்த பேரணியில் மேயர் ரோசா ருசோ இயர் வோலினோ பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பெர்லுஸ்கோனியின் காமகளியாட்டம் இத்தாலிய பெண்கள் சமுதாயத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பெர்லுஸ் கோனிக்கு எதிராக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் பெண்கள் போராட்டம் நடந்தது. அங்குள்ள இத்தாலி தூதரக அலுவலகம் முன்பு சுமார் 100 பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com