Saturday, February 19, 2011

வடை கறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:


கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.



ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

வடைகறியை இட்லி ...தோசைக்கு... side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்..

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com