Saturday, February 12, 2011

மக்கரல் மீன் குழம்பு


தேவையான பொருட்கள்
பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்)
மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி
சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்)
பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்)
பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு)
உள்ளி - 1 பூண்டு
தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.)
தண்ணீர் - ஒரு கப்
தேசிக்காய் - 1
சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு
உப்பு / மஞ்சள் / கறிவேப்பிலை - தேவையான அளவு

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி உப்பு, தேசிப்புளி போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பு சூளையை (Oven -ஓவன்) சூடாக்கவும். சூடாகியவுடன் ஒரு தட்டில் ஈயத்தாளை விரித்து மீன் துண்டங்களை அதன் மேல் வைத்து அடுப்பு சூளைக்குள் வைக்கவும். 30 நிமிடங்களின் பின் சூளையை திறந்து பார்த்து மீன் பொரிந்து வந்துள்ளதா எனப் பார்த்து தேவையாயின் 5 -10 கூட நிமிடங்கள் கூட விட்டு உங்களுக்கு விருப்பமான பதம் வந்தவுடன் மீனை இறக்கவும். (மீனில் எண்ணெய் உள்ளதால் தனியே எண்ணெய் சேர்க்கத் தேவையில்லை. எண்ணெய் முற்றாக வற்றிப்போகும் முன்பு எடுத்தால் நல்ல சுவையாக இருக்கும்.)

ஒரு சட்டியில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள், உள்ளி,கறிவேப்பிலை,தண்ணீர் ஆகியவற்றை கலந்து அடுப்பில் தீ மூட்டி வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். பின்பு பழப்புளி, தேங்காய்ப் பால், சின்ன சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றைப போட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து தீயை அணைக்கவும். . அதன் பின் மீன் துண்டங்களையும் ஈயத்தாளில் ஒட்டி உள்ள மீன் எண்ணெயையும் கறிக்குள் போட்டு வெந்தயம், கறிவேப்பிலை கலந்து விடவும்.
பொரித்து வைத்த மீன் குழம்பு மாதிரி சுவையாக இருக்கும். புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து உண்ணா சுவையாக இருக்கும். சூளையில் வைத்த மீன் துண்டங்களை பொரியல் மாதிரியும் சாப்பிடலாம்.

டிஸ்கி
இந்த மீனில் ஒமேகா-3 நிறைய உண்டு. இது கொலஸ்ரோலின் அளவைக் குறைக்கும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com