Wednesday, February 16, 2011

மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்


டிம்பிக்யூ: மெக்சிகோ நாட்டிற்கு கோகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கொலம்பிய கப்பல் படையினர் கைப்பற்றியுள்ளனர். கொலம்பியாவின் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கப்பலை கப்பல்படையினர் கண்டுபிடித்துள்ளனர். 100 மீட்டர் நீளமும் ,30அடி ஆழம் வரையில் தண்ணீருக்கு அடியில் செல்லும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் எட்டு டன் அளவிற்குசரக்குகளை ஏற்றும் வசதியும் கொண்டுள்ளது.இந்த மாதிரியான கப்பலை போன்று வேறு எங்கும் காணப்பட வில்லைஎன்றும் இதன் சர்வதேச மதிப்பு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டலாராக இருக்க கூடும் என கொலம்பியா ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com