வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்..
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது)
தேங்காய் - 4 பத்தைகள்
காய்ந்தமிளகாய் - 4 எண்கள்
உப்பு - தேவைக்கேற்ப
புளி - பட்டாணி அளவு
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாய் வைத்து அதில் சில சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை பல்பல்லாக நறுக்கி மிக்சி ஜாரில் போடவும். அத்துடன் வேர்க்கடலை, வறுத்த மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
இது இட்லி, தோசைக்கு ஏற்ற இணை உணவாகும்.தேவையான பொருட்கள்:

இது வேர்கடலை மற்றும் இட்லி... தோசை.... பிரியர்களுக்கு சமர்பணம்... ஈழத்தில் இதற்கு பெயர் வேர்கடலை சம்பலா? தோழர்கள் விளக்குக.
No comments:
Post a Comment