skip to main |
skip to sidebar
ராஜஸ்தானில் கலப்பட மருந்தால் 12 கர்ப்பிணிகள் பலி
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 கர்ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. பொதுமக்கள் சாலைமறியல் , ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் ஒமியாத் அரசுமருத்துவமனை உள்ளது.இங்குள்ள மகப்பேறு பிரிவில் தினமு்ம் ஏராளமான கரப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 12 கர்ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்துள்ளனர். இதற்கு போலி மருந்து வழங்கியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடலில் ஏற்றப்படும் குளுகோஸில் நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களால் இந்த உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் இங்கு சிகிச்சை பெற்று திரும்பிய 12 கர்ப்பிணிகள் இறந்ததால் ,
உறவினர்கள் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் ஜோத்பூர் தொகுதி முதல்வர் அசோக்கெலாட்டின் சொந்த தொகுதி என்பதால் பிரச்னை பெரிதானது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருந்து பொருட்கள் ஜெயப்பூரில் உள்ள மருத்துவ ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010-2011 www.christosebastin.blogspot.com
No comments:
Post a Comment