Saturday, February 12, 2011

மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார்


உலக புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டதுதான் அவரது சாவுக்கு காரணம் என குடும்ப டாக்டர் முர்ரே மீது புகார் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி மைக்கேல் பாஸ்டார் முன்னிலையில் நடந்தது. அப்போது, மைக்கேல் ஜாக்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் ரோஜர்சிடம் டாக்டர் முர்ரேயின் வக்கீல் மைக்கேல் பிளானாகன் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, மைக்கேல் ஜாக்சனின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக மருந்தின் தாக்கம் இருந்தது. அதுவே அவரது சாவுக்கு காரணம் ஆனது. இது அவர் கொலை செய்யப்பட்டார் என்றே கருத தோன்றுகிறது என்றார். டாக்டர் முர்ரேயின் வக்கீல் பிளானாகன் வாதாடும் போது,

’’மைக்கேல் ஜாக்சன் இறக்கும் தருவாயில் டாக்டர் முர்ரே அங்கு இல்லை. அவருக்கு மருந்து மாத்திரைகளை முர்ரே வழங்கவில்லை. அவற்றை ஜாக்சனே எடுத்து கொண்டார். எனவே அவரது சாவுக்கு டாக்டர் முர்ரே காரணம் இல்லை’’ என்றார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com