Saturday, February 12, 2011

தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் பலி

வாக்கெடுப்பின் பின்னர் மீளவும் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன. தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 39 பேர் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜ் ஆதருக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களுக்கும் தென் சூடான் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வட சூடானிலிருந்து பிளவடையும் நோக்கில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு 99 வீதமான சூடான் மக்கள் ஆதரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வஜன வாக்கெடுப்பிற்கு முன்னர் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனினும், வாக்கெடுப்பின் பின்னர் மீளவும் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com