Friday, February 25, 2011

கோத்ரா ரயி்ல் எரிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு

ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 31 பேரின் தண்டனை குறித்த விபரங்களை சிறப்புகோர்ட் இன்று அறிவிக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு சபர்மிதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.இதைத்தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22--ம் தேதி இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான தண்டனை இன்று வெளியாகவுள்ளது. நீதிபதி ஆர்.ஆர். பட்டோல் தீர்ப்பு வழங்கவுள்ளார். முன்னதாக குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்னர். இந்த வழக்கில் முல்விஹூசைன்ஒமர்ஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 31 பேர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 147, 148, 323,324,325, 135-ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com