Monday, February 14, 2011

பரோட்டா + வெஜிடபிள் குருமா


தேவையான பொருள்கள்

மைதா மாவு
உப்பு
எண்ணெய்

செய்முறை:

முதலில் மைதா மா‌வி‌ல் தேவையான அள‌வு உப்பு சேர்த்து, கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்தி‌க்கு மாவு ‌பிசைவது போ‌ல் ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

கொ‌ஞ்ச‌ம் தளதளவெ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் அரை மணி நேரம் ஊற‌வி‌டவு‌‌ம்.

ஊ‌றிய மாவை உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து சப்பாத்தி‌க்கு ‌திர‌ட்டுவது போ‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் அனை‌த்து ஊரு‌ண்டைகளையு‌ம் ‌எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு திரட்டி‌க் கொள்ளவும்.

‌பிறகு கொ‌ஞ்சமாக மைதா மாவை எடு‌த்து ‌சி‌றிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும்.

திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சுருட்டி சிறு சிறு துண்டுகள் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு லேசாக திரட்டி கொ‌ள்ளவு‌ம். அழுத்தி திரட்ட வேண்டாம், மாவு ஒ‌ன்றாக ஒ‌ட்டி‌க் கொள்ளும்.

அடுப்பில் தோசைகல்லினை வைத்து சுடானதும் மிதமான தீயில் ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். இத‌ற்கு கா‌ய்க‌றிக‌ள் போ‌ட்ட குருமா ச‌ரியான இணை உணவாக இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com