Tuesday, February 22, 2011

காலிபிளவர் சூப்

தேவையான பொருட்கள்
காலி பிளவர் 1 கப்,
காலி பிளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.

செய்முறை
காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன் றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயா ரித்து வைத்து இருந்த காலி பிளவர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். இப்போது மேலும் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பாலை கலக்கவும். காலி பிளவர் சூப் ரெடி. சுவை அபாரமாக இருக்கும். உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com