Tuesday, February 22, 2011

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம்
வெட்டிய வெங்காயம் - 100 கிராம்
வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு
சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு
வெந்தயம் - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - தேவையான அளவு
பழப்புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள்.

3. பின்னர்தேங்காய்ப் பால், பழப்புளி, யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.

4. பதமான பதத்தில் இறக்கிப் பரிமாறுங்கள்.

இந்நண்டுக் கறிக்கு யாழ்ப்பாணத்து மக்கள் முருங்கை இலை சேர்ப்பது அவர்களின் தனித்துவமான உணவுப் பாணியாகும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com