பாட்டயா: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாட்டயாவில் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப் பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீண்ட நேரம் முத்தம் தரும் போட்டி நடைபெற்றது.போட்டியில் திருமணமான தம்பதிகள், காதலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். போட்டியில் ஏழு தம்பதிகள் களத்தில் இருந்தாலும் எக்காசாய்- லக்ஷனாடி ரானாரத் தம்பதி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற்றனர். இதற்காக இவர்கள் செலவழித்த மொத்த நேரம் சுமார் 46 மணிநேரம் 24 நிமிடம் 9 நொடிகளாகும். போட்டி யானது கடந்த ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு துவங்கியது. செவ்வாய் கிழமை மதியத்திற்கு பின்னர் தான் முடிவு பெற்றது. போட்டியின் பரிசு தொகையான ஆயிரத்து 606 அமெரிக்க டாலர் மற்றும் மூன்றா யிரத்து 213 அமெரிக்க டாலரை பரிசாக வென்றனர்.போட்டியின் போது குடிநீர் , காபி, பால் மற்றும் பழச்சாறு போன்றவை குடிகக அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அவை முத்தம் தந்து கொண்டே ஸ்டிரா மூலம் குடித்து கொள்ள அனுமதிக்கப்பட் டது.ஒவ்வொரு மூன்று மணிநேர இடைவெளி நேரத்தில் இயற்கை உபா தையை தீர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. போட்டி முடியும் நேரம் வரை உட்கார வும்,தூங்கவும் அனுமதி கிடையாதுஎன்பது வியாகும்.கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற முத்தப் போட்டி யின் நேரம் 32 மணிநேரம் ஏழு நிமிடம் 14 வினாடி யாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment