Wednesday, February 23, 2011

இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிப்பு


டில்லி: தேங்காய் ஏற்றுமதிக்கு இலங்கைஅரசு தடை விதித்துள்ளதால், மத்தியகிழக்கு நாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேங்காய் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டு்ள்ள செய்தியில், மத்திய ‌வேளாண்த்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த தேங்காய் சாகுடிமேம்பாட்டு மையத்தினை துவக்கியுள்ளது. இதன் மூலம் தேங்காய் உற்பத்தியில் தீவிரம் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து வந்த இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனெனில் இலங்கையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் உள்நாட்டில் தேங்காய் மிகவும் அத்தியாவசியமாக இருந்தது. தற்போது இந்தியா இலங்கையின் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா ஆகி‌ய நாடுகளுக்கு தேங்காயினை ஏற்றுமதி செய்கிறது. மேலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த வாரியத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி 50 சதவீதம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. தேங்காய் உற்பத்தியில் இந்தியாவில் கேரளா,தமிழ்நாடு, கர்நாடாக, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்க‌ளே வருடத்திற்கு 54 பில்லியன் அளவிற்கு உள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com