Saturday, February 12, 2011

கொத்து புரோட்டா


தேவையான பொருட்கள்
குருமா (வெஜ் அல்லது நான்வெஜ்) - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 3/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
முட்டை - 1
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
கூர்மையான விளிம்புள்ள டம்ளர் - 1
உப்பு,சமையல் எண்ணெய்
பரோட்டா - 5



செய்முறை

பரோட்டாவை சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்.
அடி கனமான கடாயில் ( நான்ஸ்டிக் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!) எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பகுதி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் குருமாவை சேர்க்கவும்.
குருமா மசாலாவுடன் நன்கு கலந்ததும் கட் செய்த பரோட்டா துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.



இப்பொழுது முட்டையையும் உடைத்து ஊற்றி கை விடாமல் கிளறவும்

முட்டை வெந்ததும், கடாயை அடுப்பில் இருந்து இறக்கி , கூரான விளிம்பு உள்ள டம்ளரால் பரோட்டா துண்டுகள் பொடியாகும் வரை கொத்தவும்.

கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து மீதியுள்ள வெங்காயத்தைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
கொத்து பரோட்டா தயார்..

 

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com