Tuesday, August 2, 2011

விலைவாசி உயர்வு: எதிர்கட்சிகள் அமளி: ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு சம்மதம்

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய அலுவல் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெபடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆளும்தரப்பு மற்றும எதிர்கட்சிகள் இடையே நடந்த பேச்சின்போது இந்த சமரசம் ஏற்பட்டது. நாளை ( புதன்கிழமை ) காலை 11 மணிக்கு லோக்சபாவில் இந்த விவாதம் துவங்குகிறது.

Tuesday, May 3, 2011

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.


பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டை


இஸ்லாமாபாத் / வாஷிங்டன்:சர்வதேச பயங்கரவாதியும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அப்போதாபாத்தில், அவர் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்கள், கடந்த 2001ம் ஆண்டு செப்., 11ம் தேதி, விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன். அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் தேடி வந்தன. இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 115 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திய பின், அங்கிருந்து தப்பிய ஒசாமா, பாக்., - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதனால், அப்பகுதியில் முகாமிட்டு அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன. இந்த தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஒசாமா எங்கிருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் அமெரிக்கப் படையினரும், அந்நாட்டு உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையில், பயங்கரவாதி ஒசாமாவுக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் வேலையாட்கள் மூலமாக, அவர் மறைந்திருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ., தொலைவில் உள்ள அப்போதாபாத்தில், பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்த, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஒசாமாவை கொல்வதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தீவிரமாக விசாரித்த பின், அனுமதி வழங்கினார்.
சுட்டுக் கொலை: இதையடுத்து, ஒசாமாவை கொல்வதற்கான திட்டம் தயாரானது. அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, நான்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய, அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் 25 பேர், தங்களின் அதிரடியை துவக்கினர். அப்போது, ஒசாமாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களுக்கும், அமெரிக்கப் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. 40 நிமிடங்கள் நீடித்த சண்டையில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம், அமெரிக்க ராணுவத்தின் பத்து ஆண்டு கால தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமாவுடன் அவருக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் அவரின் மகனும், மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த மற்ற எந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை.

ஒசாமா தங்கியிருந்த வீட்டை, அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்த போது, தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து ஒசாமாவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட பின், அவரின் உடலை அமெரிக்கப் படையினர் கைப்பற்றினர். இந்தச் சண்டையின் போது, அமெரிக்கப் படையினர் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று சேதம் அடைந்தது. அதை அமெரிக்கப் படையினர் வெடிமருந்துகள் மூலம் அழித்தனர். சண்டை நடந்து ஒசாமா கொல்லப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பின், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

பயங்கரவாதி ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஒசாமா பதுங்கியிருந்த வீடு, வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. வீட்டை சுற்றிலும் ஏழு அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன்மீது மின்சார ஒயரும் பொருத்தப்பட்டிருந்தது என, பாகிஸ்தான் செய்தி சேனல்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகேயுள்ள இந்த வீட்டில், ஒசாமா பதுங்கியிருப்பதாக, அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் கிடைத்துள்ளது. அது முதல் அந்த வீட்டை அமெரிக்க உளவு நிறுவனத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இல்லை. "டிவி'யும் கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய குப்பைகள் எல்லாம் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் பெரிய அளவில் இருந்தன. சில வழிகள் மூலமாகவே மட்டுமே அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். சிலர் மறைந்திருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது போலவே அந்த வீடு உள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துங்வா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த வீட்டை முதலில் ஆக்கிரமித்து, அதன்பின் ஒசாமா பதுங்கியிருக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் உரிய நீதியை அமெரிக்க மக்களுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். உலகம் முழுவதும் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒசாமா பின் லேடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாத்தில் வைத்து அமெரி்ககப் படைகளால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லேடனின் இளைய மனைவியும், ஒரு மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் பலி எதிரொலி-அல்கொய்தா அணு குண்டு வீசுமா?

லண்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது உயிருடன் பிடிபட்டாலோ ஐரோப்பிய நாடுகள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று அல் கொய்தா ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சொன்னபடி அவர்கள் செய்வார்களா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.


இந்த எச்சரிக்கையை ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒரு விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அமெரிக்க தூதரக கடிதப் பரிமாற்றத்தில் தெரிய வந்தது.

அதில் அந்த அல் கொய்தா தலைவர் கூறுகையில், பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியாது. ஒரு வேளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம். இதற்காக ஒரு அணுகுண்டை ஐரோபப்ிய நாடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

தற்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால், அல் கொய்தா அடுத்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை குறி வைத்து அது தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஏற்கனவே எச்சரித்தபடி அது அணுகுண்டு வீச்சில் இறங்குமா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுகுண்டு என்பது ஏதோ பொறி உருண்டை போல சாதாரணமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாத ஒன்று என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அல் கொய்தா ஆதரவு நாடு ஏதாவது அவர்களுக்கு இதுதொடர்பாக உதவினால் நிலைமை விபரீதமாகக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிஐஏ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி ஒசாமைவைக் கொல்ல கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா கையெழுத்து போட்டு அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றினர் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி பலியானது ஒசாமா தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர்.

பின்லேடன், அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட உலகெங்கும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் பின் லேடன்.

Thursday, April 21, 2011

"மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது'' - இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.


கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையில், "4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேனை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம்தான் தெரிவிக்க வேண்டும்.

அந்த மீனவர்களைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை", என்றார்.

மே 13ல் ஓட்டு எண்ணிக்கை: 17ம் தேதி ஆட்சி- கால அவகாசம் இல்லாததால் கட்சிகள் தவிப்பு

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புதிய அரசு பதவியேற்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அதற்குள் ஆட்சி அமைத்துவிட முடியுமா என்ற குழப்பத்திலும் கவலையிலும் திமுக, அதிமுக ஆகியவை ஆழ்ந்துள்ளன.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006ம் தேதி காலை 9.30 மணிக்கு 13வது சட்டசபை கூடியது. உடனே புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.

அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14வது சட்டசபை 17-5-2011ம் தேதி காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக இப்போது ஆட்சியில் உள்ள அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர் வென்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதையடுத்து தேர்தலில் வென்ற கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். கூட்டணி  ஆட்சியாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் தரப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் சென்னைக்கு வரவேண்டும். யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். இதற்கெல்லாமே மொத்தமே 4 நாள் தான் அவகாசம் உள்ளது.

கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையி்ல் திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். சில கட்சிகள் பதவிக்காக கூட்டணி மாறக் கூட வாய்ப்புள்ளது. துணை முதல்வர் , அமைச்சர் பதவிகள் என மோதல்கள் ஏற்பட்டால் உடனே இதில் தீர்வு கண்டு அரசை அமைத்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தான் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13ம் தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், துணை சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

தேர்தல் முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை.

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரிரு நாளில் அதிமுக அரசு பதவியேற்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவுக்கும் கால அவகாசம் தேவை.

தேமுதிக என்ற யானையை கட்டுப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம் ஆகும்.

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.

இதனால் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு நிம்மதியின்றி தவித்து வருகின்றன என்பதே நிஜம்

தகவல் பெறும் உரிமை: வேறு சிறந்த வழியிருக்கிறதா?

எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் முக்கியத் துணையாக நிற்பவை நம்பகமான தகவல்கள்தான். அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி பெறுகிற சரியான தகவல்களின் அடிப்படையிலேயே எந்த முடிவையும் எடுக்க முடியும்.


இந்திய அரசைப் பொறுத்தவரை, தங்களிடமுள்ள தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது!.

அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்களின் பங்களிப்பே இல்லாமல் போனதன் பின்னணி இதுதான்.

2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசிடமிருந்து தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு ஓரளவு துணை புரிகிறது. ஆனால் தகவல்களைப் பெற இதுதான் சிறந்த வழியா? இதை விட சிறந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட வேறு வழிமுறை ஏதேனும் உள்ளதா?.

இது தொடர்பான உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து தெரிவிப்போர் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

ஐபிஎல் வீரர்களை திரும்ப அழைக்கும் விவகாரம்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்து!

கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.


இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் பேசி, டுவென்டி20 போட்டியில் மே 15-ம் தேதி வரையாவது விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

எனினும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், கிரிக்கெட் வாரியத்தினரும் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவினர் நேற்று நீண்ட நேரம் விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னால் கேப்டன் குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன மற்றும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலகரத்ன தில்ஷான் உள்ளிட்ட 11 வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக நாடு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன்கள்தான் தனக்கு முக்கியம் எனத் தெரிவித்த அளுத்கமகே, இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.

மதுரை மேற்கு தொகுதி பணம் பட்டுவாடா-தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினார் கலெக்டர் சகாயம்

மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்திய மதுரை கலெக்டர் சகாயம், தமிழக தேர்தல் அதிகாரிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். இதனால் அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் ரூ.81 லட்சம் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணம் சிக்கியதை அடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மேற்கு தொகுதியில் விசாரணை நடத்திய கலெக்டர் சகாயம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு தனது 3 பக்க அறிக்கையை அனுப்பினார்.

இது தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சகாயம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் அவர் அனுப்பிய அறிக்கை மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது மதுரை மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்திவைக்கப்படலாம்.
அல்லது தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகள் நடத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்தனர்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது சிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.

ரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு ரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது வார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம் தரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக தேர்தல் கமிஷனும் சகாயத்திடம் அறிக்கை கோரியது என்பது நினைவுகூறத்தக்கது

இப்போது நொய்டா நில சர்ச்சையில் 'லோக் பால்' சாந்தி பூஷண்!

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், இப்போது நில விவகாரத்தில் மாட்டியுள்ளர்.


'உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று அவர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சிடியும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நொய்டா அருகே 10,000 சதுர அடி நிலத்தை தனது மகன் ஜெயந்தின் பெயரில் அம் மாநில முதல்வர் மாயாவதியின் உதவியால் சாந்தி பூஷண் அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இதை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். என்னை லோக்பால் குழுவிலிருந்து நீக்க அடுத்தடுத்து பொய்யான புகார்களை சில சக்தி வாய்ந்த நபர்கள் கிளப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் முதல்வர் மாயாவதியின் கோட்டாவிலிருந்து வரவில்லை. அதை நான் முறைப்படி விண்ணப்பித்து வாங்கினேன். சரியாகச் சொன்னால் அந்த நிலம் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை என்றார்.

இந் நிலையில் பூஷணுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள சிடியை வெளியிட்டதாகக் கருதப்படும் அமர் சிங், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிடியை நான் வெளியிடவில்லை. ஆனால், அதில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்று கூறியது சாந்தி பூஷண் தான் என்பது மட்டும் நிச்சயம். அது தனது குரல் இல்லை என்று சாந்தி பூஷண் நிரூபிக்கட்டும் என்றார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பஹுகுண ஜோஷி டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதாவை கொண்டு வர சமூக சேவகர் அண்ணா ஹசாரா முயற்சி எடுத்து வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அதன் வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள சாந்தி பூஷண், அவரது மகன் பிரசாந்த் பூஷண் இருவரும் தங்கள் மீதான புகார்களுக்கு முதலில் பதில் தெரிவிக்க வேண்டும்.
நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் சிலைகள் கொண்ட பூங்கா அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக சாந்தி பூஷண் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மகனுக்கும் நொய்டாவில் 10,000 சதுர அடி பரப்பளவு உள்ள பண்ணை வீட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லஞ்சம் இல்லாமல் வேறு என்ன. இதுகுறித்து சாந்தி பூஷண் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந் நிலையி்ல் லோக்பால் மசோதாவை சீர்குலைக்க அமர் சிங் மூலமாக அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி கெடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது திமுகவினர் தாக்குதல்-ஜெயலலிதா

சென்னை: பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக் காலமாக கொலை, கொள்ளைகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.4.2011 அதிகாலை ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதேபோன்று, மதுரை மாவட்டம், உச்சபரம்புமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த சந்துரு என்பவரை திமுக கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது.

மதுரையில் மட்டும் கடந்த 15 நாட்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதே போல், சென்னை கல்லூரி மாணவர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலைமறியல் நடத்திய மாணவ- மாணவியர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர். இதே போன்று, சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவர் மர்மக்கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதன் காரணமாக, தேமுதிக மாவட்டப் பொருளாளர் கேசவன் மீது திமுக கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த கேசவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவற்றின் உச்சகட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மும்தாஜ் என்பவர் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திமுகவைச் சேர்ந்த கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளீதரன் தனது வாகனத்திற்கு, மும்தாஜ் வழி விட மறுக்கிறார் என்று தெரிவித்து, அவரையும், அவரது மகனையும் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் மும்தாஜ் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. திமுகவிற்கு சாதகமாக காவல் துறை செயல்படுவதை கண்டித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது.

காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். தற்போது திமுகவினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்து 6 நாட்கள் முடிவதற்குள்ளேயே இந்த நிலைமை என்றால், வாக்கு எண்ணிக்கை நாள் வருவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அரசை வைத்துக்கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்தப் போகிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தமிழக மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை களையும் வகையில், உறுதியான, திடமான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடுக்கு இரட்டை ஆயுள் உறுதி-உச்ச நீதிமன்றம்

டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு வழங்கப்பட்ட இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனை ர‌த்து செ‌ய்த செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தின‌் ‌தீ‌ர்‌ப்பை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்துள்ளது.


வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

‌செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.

விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.

ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன் டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று தீர்ப்பளித்தனர்.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலும் ஜா‌ன் டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறை அதிகாரி முன் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

Friday, March 11, 2011

ஜப்பானில் பயங்கர பூகம்பம்-பல பகுதிகளை 'விழுங்கிய' சுனாமி: ஏராளமானோர் பலி!


டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.


சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.

சுனாமி தாக்கியது : ஜப்பானில் பெரும் நாசம் ; பயங்கர நிலநடுக்கம் :பல வீடுகள‌ை கடல் விழுங்கியது


டோக்கியோ : ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250 கி.மீட்டர் தொலைவில் ) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


இன்று ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 8. 8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது.

Sunday, March 6, 2011

மதிமுக கேட்பது 36.. கிடைக்கப் போவது 17!

சென்னை: அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் நுழைந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்ட நிலையில் மதிமுகவுக்கு 17 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியி்ல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வைகோவின் மதிமுக போட்டியி்ட்டது. அந்தக் கூட்டணி அமைவதற்கு முதல் நாள் வரை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. மதிமுகவுக்கு 27 இடங்கள் கொடுப்பதாக திமுக கூற, அதை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணிக்கு மாறினார் வைகோ.

வருண் காந்தி திருமணம்: ராகுல் பங்கேற்பு!

வாரணாசி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் சஞ்சய் காந்தி - மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு நாளை திருமணம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி எம்பி பங்கேற்கிறார்.

மணமகளின் பெயர் யாமினி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பேஷன் டிசைனர் இவர்.

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி


சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

தாமஸ் விவகாரத்தில் பிரதமரை குறை கூறும் வேகம் தணிகிறது: எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா புதிய விளக்கம்

புதுடில்லி : மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமித்ததற்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வேகம் தணிகிறது. தாமஸ் நியமனம் தொடர்பாக, பிரதமரை மேலும் கேள்விகள் கேட்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொண்டு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14மில்லியன் பவுண்டு செலவில் திருமணம்

புதுடில்லி :இந்தியாவின் மொத்த உணவு தானிய விரயத்தால் ஏற்படும் பற்றாக்குறையில் 15 சதவீதத்தை ஈடுசெய்யும் செலவில் ஒரு இந்திய திருமணம் நடத்தப்பட்டுளளது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது. திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன்

விழுப்புரத்தில்ரூ.1.25 கோடியில் மின் மயானம் திறப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் இயற்கை அழுகுடன் அமைக்கப்பட்ட முக்தி எரிவாயு தகன மேடை (மின் மயானம்) இன்று திறக்கப்படுகிறது. விழுப்புரம் கே.கே.ரோடில், நகராட்சி மற்றும் ரோட்டரி சார்பில் மக்கள் பங்களிப்புடன் 2.25 ஏக்கர் பரப்பளவில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி 65 லட்சமும், ரோட்டரி 30 லட்சமும் ரூபாயும்,

Friday, February 25, 2011

கோத்ரா ரயி்ல் எரிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு

ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 31 பேரின் தண்டனை குறித்த விபரங்களை சிறப்புகோர்ட் இன்று அறிவிக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு சபர்மிதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.இதைத்தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22--ம் தேதி இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான தண்டனை இன்று வெளியாகவுள்ளது.

ராஜஸ்தானில் கலப்பட மருந்தால் 12 கர்ப்பிணிகள் பலி

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ‌‌ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 கர்ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. பொதுமக்கள் சாலைமறியல் , ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தானில் உள்ள ‌ஜோத்பூரில் ஒமியாத் அரசுமருத்துவமனை உள்ளது.இங்குள்ள மகப்பேறு பிரிவில் தினமு்ம் ஏராளமான கரப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 12 கர்‌ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்துள்ளனர்.

கடைசி பயணத்தை தொடங்கியது டிஸ்கரி விண்கலம்

வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது. அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா , தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளிவீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது.

Wednesday, February 23, 2011

ஜிங்கூவா செய்தி நிறுவனத்தின் புதிய தேடுதல் வலைதளம்

மும்பை: சீன ‌மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து , அந்நாட்டு முன்னணி செய்தி இணையதளமான ஜிங்கூவா புதிய தேடுதல் இணையதளத்தினை நேற்று துவங்கியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற செய்தி இணையதளமான ஜிங்கூவா, அந்நாட்டின் மிகவும் பிரபலமான மொபைல் நிறுவனத்ததுடன் இணைந்து தேடுதல் இணையதளத்தினை துவக்கியுள்ளது. தற்போதுஉலகளவில் மிகவும் பிரபரலமான தேடுதல் இணையதளமாக கூகுள் உள்ளது. இவற்றிற்கு போட்டியாக இந்த தேடுதல் இணைய‌தளத்தில் புகைப்படங்கள், வீடியோ படங்கள், ஆடியோ,

இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிப்பு


டில்லி: தேங்காய் ஏற்றுமதிக்கு இலங்கைஅரசு தடை விதித்துள்ளதால், மத்தியகிழக்கு நாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேங்காய் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டு்ள்ள செய்தியில், மத்திய ‌வேளாண்த்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த தேங்காய் சாகுடிமேம்பாட்டு மையத்தினை துவக்கியுள்ளது. இதன் மூலம் தேங்காய் உற்பத்தியில் தீவிரம் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து வந்த இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

லிபியாவுடனான அனைத்து தொடர்புகளையும்துண்டித்தது பெரு

லிமா: ஆப்ரிக்காகண்டத்தை சேர்ந்த லிபியா நாட்டில் நடைபெறும் கலவரத்தை அடுத்து அந்நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஆலன் கார்சியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: லிபியா நாட்டின் அதிபர் கடாபி நாட்டின் தலைவராக இருந்து வழி நடத்தும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவிக்காக மக்களின் மீது ராணுவத்தை ஏவி அவர்களை அடக்க நினைக்கிறார்.

2ஜி' விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறதா' என, சி.பி.ஐ.,யிடம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ., சார்பில் நேற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Tuesday, February 22, 2011

காலிபிளவர் சூப்

தேவையான பொருட்கள்
காலி பிளவர் 1 கப்,
காலி பிளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.

செய்முறை
காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.

செட்டிநாட்டு வத்த குழம்பு..


சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன்
வெங்காயம் - 3
பூண்டு- 10 பல்
தக்காளி - 1
சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன்
புளி எலுமிச்சை உருண்டை அளவு
உப்பு- தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய் - 5 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு..

செய்முறை..

வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...

கோழிச் சாம்பார்!


எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.
இனி செய்யத் தேவையான பொருட்கள்;

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம்
வெட்டிய வெங்காயம் - 100 கிராம்
வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு
சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு
வெந்தயம் - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - தேவையான அளவு
பழப்புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

Monday, February 21, 2011

வி.ஏ.ஓ., தேர்வில்11 ஆயிரம் "ஆப்சென்ட்'

மதுரை:மதுரை மாவட்டத்தில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வில் 11 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்' ஆகினர்.கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) பணிநியமனத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் ஓ.சி.பி.எம்., பள்ளி, மதுரை கல்லூரி பள்ளி, சேதுபதி பள்ளி, சவுராஷ்டிரா பள்ளி, மீனாட்சி கல்லூரி உட்பட 132 மையங்கள் உட்பட மாவட்ட அளவில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரிலும் 187 மையங்களில் தேர்வு நடந்தது. மதுரையில் நடந்த இத்தேர்வில் மட்டும் பங்கேற்க 57 ஆயிரத்து 580 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்களில் 46 ஆயிரத்து 624 பேர்தான் நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 10 ஆயிரத்து 956 பேர் "ஆப்சென்ட்' ஆகியிருந்தனர். விண்ணப்பித்தோரில் 81 சதவீதம் பேரே தேர்வில் பங்கேற்றனர்.

வங்கி மேலாளர் மாயம்: மனைவி போலீசில் புகார்

நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மாயமானது குறித்து அவரது மனைவி, நாமக்கல் போலீசில் புகார் செய்துள்ளார். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (53). அவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 17ம் தேதி வங்கிக்கு சென்ற தங்கராஜ் மாலை வீடு திரும்பியுள்ளார்.அன்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை.

Sunday, February 20, 2011

சார்லி சாப்ளின் பேரனுக்கு கர்நாடகாவில் திருமணம்


கர்வார்: சார்லி சாப்ளினின் பேரன் மார்க் சாப்ளின் கர்நாடக மாநிலத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். உலகம் முழுவதும் தனது குள்ள உயரம் மற்றும் ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரிக்கவைத்த நடிகர் சார்லி சாப்ளின். இவரது பேரன் மாரக் சாப்ளின் (60).இவர் அமெரிக் காவில் வசித்து வருகிறார். இருப்பினும் கடந்த 40 ஆண்டுகாலமாக கர்நாடக மாநிலம் கோகர்னா பகுதிக்கு வருகை தந்து இந்து மதம் குறித்து ஆராய்ந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 20 வருடங்களாக இந்து மதத்தில் பிடிப்பு ஏற்பட்டு சுவாமி ராம்தாஸ், சுவாமி சச்சிதானந்தம் ஆகியோரின் உரைகள்கொண்ட சிடிகளை கேட்க துவங்கினார்.

கௌதம் மேனன்:ரஜினி-கமலை இயக்க ஆசை! –


ஒரே படத்தில் ரஜினி – கமல் இருவரையும் வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் இயக்குநர் கௌதம் மேனன்.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன், தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தில் வீரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.

Saturday, February 19, 2011

குலோப் ஜாமூன் ...

தேவையான பொருட்கள்:-

மில்க் பவுடர்- 2 கப்

மைதா -1/2கப்

பால்-1/4கப்

பட்டர்- 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்

எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு



ஜீரா தயாரிக்க;-


சீனி-3கப்

தண்ணீர்-3கப்

ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ்

1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும்.

வடை கறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:


கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.

கொடி பிடிக்கிறார் கிருஷ்ணசாமி : "2 போதாது....!! 9 தொகுதிகள் வேண்டும் ....!!"


வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி,   தொகுது பங்கீட்டில் அதிமுக அணியில் புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  சென்னையில் நடந்த புதிய தமிழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடுதல் இடம் கேட்டு கோரிக்கை எழுந்துள்ளது.
’’9 தொகுதிகளில் போட்டியிட்டால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறலாம்.    எனவே 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்’’ என்று  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கோரிக்கை

கொத்தமல்லிச் சட்னி

தேவையான பொருள்கள்:


கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க - எண்ணை, கடுகு,

செய்முறை:


* கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
* காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

சேமியா கிச்சடி


தேவையானப் பொருட்கள்:

4 பேருக்கு


சேமியா : 350 கிராம்
ம.தூள் : ஒரு சிட்டிகை
வெங்காயம் : ஒன்று
ப.மிளகாய் : 2
தக்காளி : 2
எண்ணெய் : தே.அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு : தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கறிவேப்பிலை, தக்காளி வெங்காயம், ப.மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். ஐந்து டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

மற்றொரு அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் தக்காளி சேர்த்துக் கிண்டவும்.

சிறிது வெந்தவுடன் சேமியாவைப் போட்டு கிண்டவும். தீயை சிம்மில் வைத்துக் கிண்டவும். ம.தூள் சேர்க்கவும். எண்ணெய், காயோடு சேர்ந்து சேமியா சிறிது சூடு வந்து வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரைச் சிறிது சிறிதாக இத்துடன் சேர்த்துக் கிண்டவும்.

தேவையான உப்பு சேர்த்துக் கிண்டி 90% தண்ணீர் இஞ்சியதும் அடுப்பை அணைத்து கிச்சடியை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்துத் திறந்தால் 100% வெந்திருக்கும்.

தேங்காய்ச் சட்னியுடனோ, கொத்தமல்லிச் சட்னியுடனோ பரிமாறலாம்.

கலைஞர் உரை :"எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்"

இன்று (19.2.2011) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து  காணொலிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற மதுரை,  திருநெல்வேலி எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்கள்  மற்றும் சென்னை மாநில தரவு மையம் ஆகியவற்றை  தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றினார்.     அப்போது அவர்,       ‘’தமிழகத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம், முதல்நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை  இரண்டாம்நிலை நகரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது.

அதன்படி,  இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்பவியல் வளாகங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்காக, அந்நகரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது.
இந்தத் தகவல் தொழில் நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள் கட்டமைப்பு வசதிகளான உட்புற சிமிண்ட் சாலைகள், தரவு வடகம்பி, மின்வட கம்பி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப்புறச் சுவர், மதகு பாலங்கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிர்வாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி, இலந்தைகுளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும்,  வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப்பையும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வழங்கியது.

இப்பூங்காக்களுக்கு 26.4.2008 அன்று   அடிக்கற்கள் நாட்டப்பட்டு; இன்று (19.2.2011) திறந்து வைக்கப்படுகின்றன.


  இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதில், 18 கோடி ரூபாய்ச் செலவில்  50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; 7 கோடியே 44  இலட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.


இலந்தைக்குளம் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
15 கோடி ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப்பூங்காக்களின்மூலம் 1400 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும், 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபாயாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பூங்காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பொது உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், எல்காட் நிறுவனம் 50 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கான கட்டடம் கட்டியுள்ளது.

இப்பூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும்,  40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 80 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்படும் மூன்றாவது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவமைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மையம் ஆகும். 

இந்த மாநிலத் தரவு மையம் சென்னை இராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டுவரும் எல்காட் நிறுவனத்தின் தமிழக பெரும்பரப்பு வலை அமைப்புச் செயலாக்க மையம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது, ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலையமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப்பட்ட மிகப் பெரிய தரவு மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும், அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல் படுத்தப்படும்.
தமிழகத்தின் பெரும்பரப்பு வலையமைப்பின் வாயிலாக அரசு மற்றும் அதன் முகவர்களும், மக்கள் பொது சேவை மையத்தில் இணையம் வாயிலாகப் பொதுமக்களும் இத்தரவு மையச் சேவைகளைப் பெற இயலும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அதன் பங்களிப்பாக 55 கோடியே 80 இலட்சம் ரூபாயையும்;  தமிழக அரசு தனது பங்களிப்பாக 5 கோடியே 16 இலட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.

 இத்தரவு மையத்தை அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்தார்
.

எள்ளுப்பா செய் முறை


எள்ளுப்பா செய் முறை
1)இரண்டு கப் வெள்ளை எள்ளு
2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து
3)ஒரு கப் சீனி
எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும்
உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும்
பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்)
அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம்.

வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.

Friday, February 18, 2011

14 நாள் சி.பி.ஐ., விசாரணை முடிந்து சிறையில் ராஜா: வீட்டு சாப்பாட்டிற்கு கோர்ட் அனுமதி


தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும் அனுமதி வழங்கினார்.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல்விவகாரத்தில், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தார். கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் முதலில் ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்தனர். அதன் பின், மேலும் நான்கு நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக இரண்டு நாட்களும், நான்காவது முறையாக மூன்று நாட்களும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் 14 நாட்களாக அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., காவல்முடிவடைந்ததை அடுத்து, நேற்று ராஜாவை பாட்டியாலா கோர்ட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் கொண்டு வந்தனர். மதியம் 2 மணியளவில், நீதிபதி சைனி முன் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சி.பி.ஐ., வக்கீல் அகிலேஷ் வாதிட்டதாவது: "ஸ்பெக்ட்ரம்' ஊழல்தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவையும், பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இவர்களை சி.பி.ஐ., காவலில் எடுக்க காரணம், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து இரண்டு பேரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து, உண்மைகளை தெரிந்து கொள்ளவே. ஆனால், இவ்விஷயத்தில், பண பரிவர்த்தனைகள் நடந்தது உட்பட முறைகேடுகள் குறித்த எந்த கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க மறுக்கின்றனர். மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கருதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இவர்களை சி.பி.ஐ., கண்காணித்து வருகிறது.

ராஜாவை வெளியில் விட்டால், அவர் ஆதாரங்களை அழிப்பதோடு, வழக்கு விசாரணைக்கும் இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது தவிர, ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தும் விசாரணையும் இன்னும் முடியவில்லை; எனவே, இவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க வேண்டும், என வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவை வரும் 3ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில்வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜாவை திகார் சிறைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. அப்போது, ராஜா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜாவுக்கு, "அல்சர்' நோய் இருப்பதால், வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும், ஏற்கனவே வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ளவும் சிறையில் அனுமதிக்க வேண்டும்.மேலும், புத்தகங்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடியையும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சைனி, "1894ம் ஆண்டுக்கான சிறைச் சட்டம் பிரிவு 31ன் கீழான விதிகள்படி, ராஜாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருவது குறித்து, சிறை கண்காணிப்பாளரை அணுக வேண்டும். சிறை விதிமுறைகளின்படி, அவர் ராஜாவின் மனுவை பரிசீலிப்பார்' என, உத்தரவிட்டார். பின்னர், ராஜா தரப்பில் ஒவ்வொருமுறையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதை தவிர்க்கும் வகையில் சிறையில் இருந்த படியே, "டெலிகான்பரன்சிங்' மூலம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு, நீதிபதி சைனி கூறுகையில், சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை யெனில், இதுகுறித்து கோர்ட்டிற்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார். ராஜா தரப்பில், நேற்று ஜாமீன் வழங்கும்படி கோரிக்கை வைப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால், டில்லி அருகே உள்ள திகார் சிறையில் நேற்று மாலை ராஜா அடைக்கப்பட்டார்.
ஆயுள் கைதி அறையில் ராஜா: திகார் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அங்கு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.ரத்தி அடைக்கப்பட்டுள்ள அறையில் அடைக்கப்பட்டார். மாலை 6 மணி அளவில் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா, அங்கு ஜெயில் எண்.1க்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் தனது அறையில் நுழைந்தது முதல், ராஜா யாரிடமும் பேசவில்லை. உள்ளே சென்றது முதல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். ராஜா அடைக்கப்பட்ட அறையில்தான், ஆயுள் தண்டனை கைதியான டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் ரத்தி அடைக்கப்பட்டுள்ளார். இவர், டில்லியில் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி இரண்டு வர்த்தகர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி, கீழ்கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்காக ஜெகன்மோகன் இன்று உண்ணாவிரதம்: அடுத்த அதிரடி

 ஆந்திராவில் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை நிதி திட்டத்தில் ஆந்திர அரசு உரிய நிதி ஓதுக்க கோரிக்கை விடுத்து ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் ஒரு வார காலம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஆந்திர மாநில முன்னாள் மு‌‌தல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், மாஜி காங்கிரஸ் எம்.பியுமான ஜெகன்ம‌ோகன்ரெட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் மாணவர்களுக்குகல்வி உதவித்‌தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உரிய நிதி ஒதுக்க கோரி இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் ஒரு வாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஜெகனுடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

Thursday, February 17, 2011

இன்று உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவக்கம்


பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் துவக்கவிழா இன்று தாகாவில் நடக்கிறது. இரண்டே கால் மணி நேரம் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின் நடக்கும் "மெகா' விளையாட்டு தொடர் என்பதால், உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 135 நிமிடங்கள் நடக்கும் துவக்கவிழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு, எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்கும் 50 நிமிட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஷங்கர், ஈசான், லாய் என்ற மூன்று இந்திய இசையமைப்பாளர்கள் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரின் "தீம்' பாடலை, இந்தி, இலங்கை, வங்கதேச மொழிகளில் அறிமுகம் செய்கின்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 42 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைக்கிறார். அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.அடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில், 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் ராட்சத உருவப்படத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கிரிக்கெட் திருவிழாவை காரணமாக வங்கதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. துவக்கவிழா நடக்கும் இன்று, பிப். 19 (இந்தியா-வங்கதேசம்) மற்றும் மார்ச் 19 (வங்கதேசம்-தென் ஆப்ரிக்கா) என மூன்று நாட்கள், தாகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக, கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படை மீண்டும் தாக்குதல்: ஒருவர் படுகாயம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை ‌கோட்டைபட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அப்போது இலங்க‌ை கடற்‌படையினர் மீனவர்களை தாக்கி படகினை சேதப்படுத்தியுள்ளனர். மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் கரை திரும்பி வந்த ராஜா முகமது என்ற மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 24 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தவகல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, February 16, 2011

சென்னையில் அசத்துமா இந்திய அணி! *பயிற்சியில் இன்று நியூசி.,யுடன் மோதல்


சென்னை: சென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சச்சின் வருகை:
பெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.
சுழல் ஜாலம்:
 முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோர், எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைக்க வேண்டும். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இது, ஹர்பஜன், அஷ்வின், பியுஸ் சாவ்லா அடங்கிய நமது "சுழல் கூட்டணிக்கு' உற்சாகம் அளிக்கும்.
நியூசி., சோகம்:
நியூசிலாந்தை பொறுத்தவரை சமீபத்தில் பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 14ல் தோல்வியடைந்துள்ளது. உலக கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. இதில் சதம் அடித்த கப்டில், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்கள் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வெட்டோரி பலம்:
வேகப்பந்து வீச்சாளர்கள் மில்ஸ், பென்னட், "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்கள் இருந்தும், முதல் போட்டியில் அயர்லாந்து அணி அதிக ரன்கள் (279) குவித்தது. கேப்டன் வெட்டோரி மட்டும் சுழலில் சிறப்பாக செயல்பட்டார். இம்முறை ஜான் ரைட் பயிற்சியில், நியூசிலாந்து அணி எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது.
வெற்றி யாருக்கு?
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இதற்கு பழிதீர்க்க, உலக கோப்பை பயிற்சி போட்டியை பயன்படுத்தலாம். அதேநேரம், வெற்றி நடையை தொடர இந்திய அணி காத்திருப்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஜாகிர் கானுக்கு ஓய்வு: தோனி
இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
கடந்த போட்டியில் "மிடில் ஆர்டர்' சொதப்பியதால் தான் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இன்று கடைசி பயிற்சி என்பதால், கடுமையாக போராட முயற்சிப்போம். அணியில் <உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் லீக் போட்டிகளின் போது, ஆடுகளத்துக்கு ஏற்ப, விளையாடும் 11 வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள். 

ஜாகிர் கானுக்கு இடுப்பு பகுதியில் லேசான வலி தான் உள்ளது. மற்றபடி பெரிய அளவில் எதுவுமில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், ஜாகிர் கானுடன் தான் களமிறங்குவோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி, எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை சார்ந்து இல்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை அனைத்து வீரர்களும் சேர்ந்து வழங்குவர். மொத்தத்தில் நியூசிலாந்து, மிக திறமையான அணி.
இவ்வாறு தோனி கூறினார்.
 
2010-2011 www.christosebastin.blogspot.com