
மீதம் பொது மக்கள் பங்களிப்புடன் கடந்த மூன்றாண்டுகளாக பணிகள் மேற்கொண்டு இயற்கை அழகுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது. முக்தி வளாகத்தில் சடங்குகள் செய்ய தனி இடமும், அரிச்சந்திரன் கோவிலும் தனியாக அமைந்துள்ளது. எரியூட்டிய பின் இரண்டு மணி நேரத்தில் அஸ்தி சேகரித்து தரப்படும். அஞ்சலி செலுத்த தனி அரங்கு உள்ளது. பால் சடங்கிற்கு தனி இடமுள்ளது. அங்கேயே இறப்பு பதிவு செய்து கொடுக்கப்படும். இந்த முக்தி எரிவாயு தகன மேடையை நகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமத்தினரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இறந்தவர் உடலை எரியூட்டுவதற்கு 1,250 ரூபாய் கட்டணமும், 500 ரூபாய் வாகன வாடகையும், மறு நாள் பால் சடங்கிற்கு 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment