Monday, February 14, 2011

சுவையான புளிச்ச கீரை துவையல்.

 
தேவையான பொருட்கள்


* புளிச்ச கீரை - ஒரு கட்டு
* காய்ந்த மிளகாய் - 10
* முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
* பச்சை மிளகாய் - 3 அல்லது 4
* பூண்டு - 7 அல்லது 8 பல்
* வெங்காயம் - ஒன்று
* வெந்தயம் - அரை தேக்கரண்டி
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* வதக்கி சேர்க்க:
* காய்ந்த மிளகாய் - 6
* பூண்டு - 6 பல்

செய்முறை:

புளிச்ச கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை தவிர மற்ற பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும். வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும்.அதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய கீரையை எடுத்து ஆற வைக்கவும்.இப்போது முதலில் வதக்கி ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.அதனுடன் வதக்கி ஆற வைத்துள்ள கீரையை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் மிளகாய் விழுதை ஒரு கடாயில் போட்டு நன்கு வதக்கவும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். அரைத்த விழுது வதங்கி எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும்.வேண்டுமென்றால் சிறிது காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டினை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளவும்.

வதக்கிய மிளகாய் வற்றல், பூண்டினை துவையலுடன் சேர்க்கவும். . சுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இந்த துவையல் 10 - 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com