உலகின் மிக வயது கூடிய கோழியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச்செய்யும் நோக்கில் சீனாவில் ஒரு கோழி வளர்க்கப்பட்டு வருகின்றது. சீனாவின் Yunnan மாகாணத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரான Yang Shaofu என்பவரும் அவருடைய மனைவியாலும் இக்கோழி வளர்க்கப்பட்டு வருகின்றது. அவர்களது மருமகளால் கொடுக்கப்பட்ட இக்கோழியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியும் ஆசையுடன் வளர்த்து வருகின்றனர்.
இது இதுவரை மொத்தம் 5000 முட்டைகளை இட்டுள்ளதாம். எனினும் இதனுடைய ஆரோக்கியத்துக்கு எந்தக் குறையும் இல்லை என்று சொல்கின்றனர் அத்தம்பதியனர். இது பற்றி உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் இக்கோழியை கொன்று சமையலுக்கு எடுக்கும் படியும் சாதனை சாத்தியப்படாது எனவும் கூறிவருகின்றனர். ஆனால் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. எனது கோழியை சாதனைக்கு கொண்டு சென்ற பின்னர்தான் எதுவும் என்னால் செய்யமுடியும். அது நிச்சயமாக சாதனையை எட்டும் என எனக்கு முழுக்க முழுக்க நம்பிக்கை உண்டு. இதை என்னால் உறிதிப்பட சொல்லமுடியும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment