Saturday, February 19, 2011

சேமியா கிச்சடி


தேவையானப் பொருட்கள்:

4 பேருக்கு


சேமியா : 350 கிராம்
ம.தூள் : ஒரு சிட்டிகை
வெங்காயம் : ஒன்று
ப.மிளகாய் : 2
தக்காளி : 2
எண்ணெய் : தே.அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு : தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கறிவேப்பிலை, தக்காளி வெங்காயம், ப.மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். ஐந்து டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

மற்றொரு அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் தக்காளி சேர்த்துக் கிண்டவும்.

சிறிது வெந்தவுடன் சேமியாவைப் போட்டு கிண்டவும். தீயை சிம்மில் வைத்துக் கிண்டவும். ம.தூள் சேர்க்கவும். எண்ணெய், காயோடு சேர்ந்து சேமியா சிறிது சூடு வந்து வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரைச் சிறிது சிறிதாக இத்துடன் சேர்த்துக் கிண்டவும்.

தேவையான உப்பு சேர்த்துக் கிண்டி 90% தண்ணீர் இஞ்சியதும் அடுப்பை அணைத்து கிச்சடியை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்துத் திறந்தால் 100% வெந்திருக்கும்.

தேங்காய்ச் சட்னியுடனோ, கொத்தமல்லிச் சட்னியுடனோ பரிமாறலாம்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com