Saturday, February 12, 2011

திருநெல்வேலி அல்வா


தேவையான பொருட்கள்:

கோதுமை - 250 கிராம்

சர்க்கரை - 500 கிராம்

பால் - ஒன்றரை கப்

நெய் - 100கிராம்



செய்முறை:


கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும்.

மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.

கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும். கைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும். இப்போது அல்வா சிவப்பு நிறத்தில் வந்து விடும்.

இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும் பொழுது நெய் தடவிய தட்டில் போட்டு ஆற வைத்துச் சாப்பிட அல்வா தயார்.

(முந்திரி ஏலக்காய் போன்றவை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் முந்திரி - 25 கிராம் எடுத்து மீதி நெய்யில் வறுத்தும் ஏலக்காய்-8 எடுத்து தோல் நீக்கி, பொடியாக்கியும் அந்தக் கலவையுடன் சேர்த்துக் கிளறலாம். திருநெல்வேலி அல்வாவில் இவை சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.)

குறிப்பு: கோதுமையைக் கல் உரல் அல்லது கிரைண்டரில் மட்டுமே அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com