Monday, February 14, 2011

தோசையோ தோசை..


இது ஒருவிதமான உடனடி தோசை...முதலில் யாரேனும் பதிந்தார்களோ தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் சத்தியமாய் நான்தான் கண்டு பிடித்தனான்.

1 . 1 சுண்டு / ரின்பால் பேணி (ஹி ஹி) உளுத்தம் மா ( கவனம் வறுக்காதது)
2 . 1 சுண்டு / ரின்பால் பேணி அவித்த கோதுமை மா ( கவனம் அவித்தது). (ஒரே அளவு மாவும், உளுத்தம் மாவும் )
3 . கொங்சம் வெந்தயம் பவுடர் ஆக்கினது ..1 - 2 தேக்கரண்டி போதும்..கூட போட்டால் கைக்கும், குறைய போட்டால் தோசை சுவது கடினம் ஒட்டும்
4 . தேவையான அளவு உப்பு, தண்ணீர்...
5 . master blaster .........ஈஸ்ட் மிக்ஸ்...தயாரிக்கும் முறை..ஹிஹி ..ஒரு பெரிய கிளாஸ் இல் ஒரு (பீர் கிளாஸ் மாதிரி) முக்கால் வாசிக்கு இளம் சூடான தண்ணீர் விட்டு, ( சயின்ஸ் படித்த பிள்ளைகளுக்காய் 45 பாகை தாண்டப்படாது ..நொதிய தாக்கம் உச்ச அளவில் வரக்கூடிய வெப்பநிலை) ஒரு 2 தே. கரண்டி சீனி போட்டு கரைக்கவும்..( glucose என்றால் திறம்--ஆனால் செய்து பார்க்கவில்லை) அதற்குள் ஒரு கால் தே.கரண்டி எஸ்ட் பவுடர் போட்டு கலக்கவும்..எஸ்ட் (Yeast ) கடையில் வாங்கலாம்.. இப்படி உருவாக்கிய எஸ்ட் மிக்ஸ் ய் 5 நிமிடங்கள் வரை வைக்கவும்..அந்த கலவை ஒரு மங்கலான நிறத்துக்கு/ ஒரு கலங்கல் தன்மையை அடையும்./ கள்ளு மணம் வரும் வர வேண்டும்/ பாண் புளித்த மணம்/ பேக்கரிக்கு பக்கத்தில போனால் வார மணம் வரவேண்டும் - அப்படி என்றால் வெற்றிதான்
6 . எல்லாவற்றையும் போட்டு கட்டி வராமல் குழைத்து/ கரைத்து வைக்கவும்..கூழ் மாதிரி இருக்க வேண்டும்...தண்ணி கூட விட வேண்டும்..
7 . ஒரு 4 தொடக்கம் 7 மணித்தாலத்தில் நாங்கள் போட்ட எஸ்ட் க்கு ஏற்றபடி நன்கு புளித்த தோசை மா வரும். அதை சுடச்சுட பரிமாறவும்.
..நான் உப்பு, மஞ்சள் கடைசியாய் ..தோசை சுட முதல் தான் போடுவது..

குறிப்பு/// புளிப்பது காணாது போல் இருந்தால் பிறகும் கொஞ்சம் யீஸ்ட் மாவில் கலக்கவும்...
செய்து பார்த்துவிட்டு சொல்லவும்...
அடுத்த முறை இன்னுமொரு சுவையான சமையல் குறிப்புடன் உங்கள் அன்பன் "சமையல்எரி"..மலை

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com