இனி செய்யத் தேவையான பொருட்கள்;
கோழி 1/2 கிலோ
தக்காளி 1/4 கிலோ
உருளை கிழங்கு 1/4 கிலோ
முருங்கங்காய் 2
கத்தரிக்காய் 2
கருவேப்பிலை
றம்பை
தாளிக்க
தேவையான
பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]
நல்லெண்ணெய்
தூள்,உப்பு
வெங்காயம்
உள்ளி,இஞ்சி
இனி செய்முறையைப் பார்ப்போம்;
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
No comments:
Post a Comment