Saturday, February 12, 2011

சிம்பிள் வெஜ் புலாவ்


தேவையான பொருட்கள் ;

சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ
எண்ணெய் - 50- மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ஏலம் - 2
கிராம்பு - 2
பட்டை - 2 சிறியதுண்டு
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது
புளிக்காத மோர் - ஒரு கப்
வெங்காயம் - 1
தக்காளி - சிறியது-1
மிளகாய் -2
கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ
மல்லி புதினா - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை

காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க கூடாது,எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.மோர் ஒரு கப் சேர்க்கவும்,விரும்பினால் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்றே முக்கால் தண்ணீர் வைக்கவும்.
இப்படி கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை தட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.

மீடியமாக தீயை வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்.புலாவை பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.மூடி பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.புலாவ் பாத்திரத்தை திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்,ஏலம் பட்டை கிராம்பு கண்ணில் பட்டால் எடுத்து விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக சஃப்டாக உதிரியாக வரும்.மோர் இல்லையெனில் தயிர் சிறிது சேர்க்கவும்.

சுவையான சிம்பிள் வெஜ் புலாவ் ரெடி.


இதனை மட்டன்,சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன்,பச்சடி,ஃப்ரை ,ஸ்வீட் அயிட்டமுடன் பரிமாறலாம்.வெஜ் பிரியர்கள் சாம்பார்,குருமா,புதினா துவையல்,வெஜ் கட்லெட்,சிப்ஸ்,காலிப்ளவர் ஃப்ரை உடன் செய்தும் அசத்தலாம்.நிஜமாகவே சாம்பாருக்கு இந்த புலாவ் அருமையாக இருக்கும்.


குறிப்பு : இஞ்சி பூண்டை சிவறாமல் வதக்கவேண்டும்,கரம்மசாலா தூள் சேர்க்காமல் தனித்தனியாக போடுவதால் புலாவ் பார்க்க வெள்ளையாக அழகாக தெவிட்டாத ருசியுடன் இருக்கும்..இஞ்சி சேர்க்காமல் வெறும் பூண்டு தயிர் சேர்த்தும் ஆக்கினாலும் வெள்ளை வெளேர்னு அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com