Sunday, February 13, 2011

காதலர் தின கொண்டாட்டம்: 5 லட்சம் பூக்கள் ஏற்றுமதி


கொடைக்கானல்: காதலர் தினத்தையொட்டி, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐந்து லட்சம் பூக்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 10 எக்டேரில் கொய்மலர்களான (பொக்கே பூ) கார்னேஷன், ஜெர்ப்பூரா, ஆந்தோரியம், சிவப்பு ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. காதலர் தின நாட்களில் மட்டும் இந்த பூவிற்கான மார்க்கெட் தேவை அதிகரிக்கும். இந்தாண்டு டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பிரிட்டனில் இருந்து, "ஆர்டர்கள்' ஏராளமாக வந்துள்ளதால், கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொடைக்கானலிலிருந்து ஐந்து லட்சம் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு பூவின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆண்டுதோறும் கொடைக்கானலில் இருந்து ஏற்றுமதியாகும் இந்த வகை பூக்களுக்கு, நிரந்தர குளிர்சாதன வசதி வாகனங்களும், கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com