Sunday, February 13, 2011

முபாரக்கின் 40.000 கோடி டாலர்கள் சுவிஸ் வங்கியில் முடக்கம்

பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.

சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிறது. வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு வட்டகையில் உள்ள ஆட்சித் தலைவர்களின் சட்ட முரணான பணம் 30 வீதம் சுவிஸ் வங்கியில் உள்ளதாக அது தெரிவிக்கிறது. மேலும் எகிப்தில் இருந்து மட்டும் வருடாந்தம் 6.36 மில்லியாட் டாலர்கள் சட்ட முரணாக வெளியேறுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. முபாரக்கின் அண்ணன் பெயரில் 8 மில்லியாட் டாலர்கள் சுவிஸ் வங்கியில் உள்ளன. முபாரக்கிற்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அவருடைய மகன் காமல் முபாரக் வரவேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக மகனின் பெயரில் 17 மில்லியாட் டாலர்களை சுவிஸ் வங்கியில் பதுக்கியிருக்கிறார்.

ஒரு நாடு ஏழ்மை நிலை அடைய இத்தகைய வம்ச முறை ஆட்சி ஒரு காரணம். இன்றைய உலக பொருளாதாரம் சுழல முடியாதவாறு பணம் ஒரு சில இடங்களில் தேங்கிக் கிடக்கவும் இவர்களுடைய கொள்ளையடிப்புக்களே காரணம். சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியிருப்போர் தொடர்பான விபரம் வெளியானால் பல நாடுகளின் அரசியல் தலைமை ஆடாமல் ஆடும் என்பதற்கு எகிப்து ஒரு சான்றாகிவிட்டது. விக்கிலீக்ஸ் தகவல்கள் தற்செயலாக வெளியானவை அல்ல, அவை நன்கு திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளன. உலகில் செய்யப்பட வேண்டிய ஜனநாயக மாற்றங்களை எகிப்துபோல பல நாடுகளில் செய்வதற்கான முன்னேற்பாடே அதுவாகும். இன்றைய எகிப்திய நிகழ்வு மக்களுக்கு கொண்டாட்டம் ஆனால் பரம்பரைகளை ஆட்சியில் வைத்திருக்க ஆசைப்படும் பலருக்கு செத்தவீட்டு பறையே காதுகளில் கேட்கும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com