Saturday, February 12, 2011

போதைப் பொருள் கடத்திய புறா!


புறாவின் காலிலும், கழுத்திலும் கட்டி தூது விட்டது அந்தக்காலம். தற்போது ஜெயிலுக்குள் போதைப் பொருள் அனுப்பிவைப்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது.

கொலம்பியாவின் வடபகுதி நகரான புகாரமங்காவில் தான் இந்த வினோத முறை பின்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறைக்குள் 45 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட புறா பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டது.


சிறைக்கு சில மீட்டர் தூரத்தில் வைத்தே இந்தப் புறா அதிகாரிகளிடம் மாட்டியது. இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முயற்சியென்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தப் புறாவின் உடலில் 40 கிராம் ஹெரேயினும், ஐந்து கிராம் ஏனைய போதைப் பொருளும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஒரு பறவை சுமந்து செல்வதற்கு இந்த எடை மிகவும் கூடுதலானது. இங்கு தான் சம்பந்தப்பட்டவர்கள் தவறிழைத்துவிட்டனர்.

இந்த எடையை சுமந்து கொண்டு பறக்க முடியாத பறவை களைப்புற்று குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பே கீழே வந்துவிட்டது.

அதனால் தான் அது எங்களிடம் மாட்டிக் கொண்டது என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com