Monday, February 14, 2011

பருப்பு கீரை கூட்டு


தேவையான பொருட்கள்

1 1/2 கோப்பை கடலைப் பருப்பு

1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது)

2 சிவப்பு தக்காளிகள்

15 பல் பூண்டு

1 தேக்கரண்டி மஞ்சள்

உப்பு தேவைக்கேற்ப

1 தேக்கரண்டி ஜீரகம்

1 தேக்கரண்டி கடுகு

2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது

செய்முறை

கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போது மீதமுள்ள பூண்டுப்பற்களையும், சிவப்பு மிளகாயையும் சேர்த்து வதக்கவும். பூண்டு பற்கள் சிவப்பாகும்போது, வேகவைத்த பருப்பைச் சேர்த்து கலக்கவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிட சிறந்தது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com