Wednesday, February 23, 2011

ஜிங்கூவா செய்தி நிறுவனத்தின் புதிய தேடுதல் வலைதளம்

மும்பை: சீன ‌மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து , அந்நாட்டு முன்னணி செய்தி இணையதளமான ஜிங்கூவா புதிய தேடுதல் இணையதளத்தினை நேற்று துவங்கியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற செய்தி இணையதளமான ஜிங்கூவா, அந்நாட்டின் மிகவும் பிரபலமான மொபைல் நிறுவனத்ததுடன் இணைந்து தேடுதல் இணையதளத்தினை துவக்கியுள்ளது. தற்போதுஉலகளவில் மிகவும் பிரபரலமான தேடுதல் இணையதளமாக கூகுள் உள்ளது. இவற்றிற்கு போட்டியாக இந்த தேடுதல் இணைய‌தளத்தில் புகைப்படங்கள், வீடியோ படங்கள், ஆடியோ, உள்ளிட்ட எல்லா விவரங்களையும் பெறலாம். இந்த இணையதளத்திற்கு பான்ங்கூஸே.காம் என பெயரிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா தலைநகர் பீய்ஜிங்கில் நடந்தது.இது குறித்து ஜிங்கூவா செய்தி ‌எஜென்சியின் தலைவர் லீ- காங்ஜூவான் நிருபர்களிடம் கூறுகையி்ல், செல்போன் உபயோகிப்பவர்கள் எவரும்இந்த தேடுதல் இணையதளத்தினை பயன்படுத்தலாம். வெளிநாட்டு ‌தேடுதல் இணையதளங்களுக்கு போட்டியாக எல்லா விவரங்களையும் இந்த இணையதளம் பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் கூறினார். சீனாவில் வலைதளங்களை பயன்படுத்துவோர் 457 மில்லியன் போர் உள்ளனர். இந்த புதிய தேடுதல் இணையதளத்தின் மூலம் நவீன தகவல் தொழில்நுட்பத்தில் ‌வெளிநாடுகளுக்கு போட்டியாக சீனா வளர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com