வாஷிங்டன்: உலகளாவிய உணவு விலை ஏற்றம் அபாய கட்டத்தை நெருங்குவதாகவும், இதான் கரணமாக வே மத்திய கிழக்கு , மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது என உலகவங்கியின் தலைவர் ராபர்ட்ஜியோலிக் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: உலகளாவில் உணவு விலை ஏற்றம் வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை உண்டாக்குகின்றன. எனவே உணவு பாதுகாப்பு என்பது எந்த நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
எனவே கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில்தான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடாடுகளான எகிப்து, துனீசிய, ஏமன் ஆகிய நாடுகளில் வன்முறைகள் தாண்டவமாடின. பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது. விவசாய பொருட்கள் உற்பத்தியிலல்முன்னிலை வகிக்கும் நாடுகளா ஆஸ்திரேலியா- ரஷ்யா ஆகிய நாடுகளில் மழை, வெள்ளம் , புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டன. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் உலகளாவில் 44 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வளர்ந்து வரும் நாடுகள் அதிகம். எனவே உணடுபாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகம் புதிய சீர்திருத்தத்தினை கையாள வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்று தான் மிகச்சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment