Monday, February 21, 2011

வி.ஏ.ஓ., தேர்வில்11 ஆயிரம் "ஆப்சென்ட்'

மதுரை:மதுரை மாவட்டத்தில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வில் 11 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்' ஆகினர்.கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) பணிநியமனத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் ஓ.சி.பி.எம்., பள்ளி, மதுரை கல்லூரி பள்ளி, சேதுபதி பள்ளி, சவுராஷ்டிரா பள்ளி, மீனாட்சி கல்லூரி உட்பட 132 மையங்கள் உட்பட மாவட்ட அளவில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரிலும் 187 மையங்களில் தேர்வு நடந்தது. மதுரையில் நடந்த இத்தேர்வில் மட்டும் பங்கேற்க 57 ஆயிரத்து 580 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்களில் 46 ஆயிரத்து 624 பேர்தான் நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 10 ஆயிரத்து 956 பேர் "ஆப்சென்ட்' ஆகியிருந்தனர். விண்ணப்பித்தோரில் 81 சதவீதம் பேரே தேர்வில் பங்கேற்றனர். காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு மிகவும் சுலபமாக இருந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் காமராஜ், வருவாய் அலுவலர் முருகேஷ் பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலர்கள் பாலாஜி, விஸ்வநாதன், ராஜன், சண்முகம், இளம்பரிதி மேற்பார்வையிட்டனர். பறக்கும் படை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு செய்தனர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com