Monday, February 14, 2011

எலுமிச்சை(தெசிக்காய்) ரசம்


ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது.
ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது.
பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம்.

எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம்

தேவையான பொருட்கள் :


§ எலுமிச்சை பழம் – 1
கரைத்து கொள்ள :
§ தக்காளி – 1 பெரியது
§ பூண்டு – 4 பல்
§ ரசப்பொடி – 1 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
கடைசியில் தாளித்து சேர்க்க :
§ எண்ணெய் அல்லது நெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் – 2
§ கருவேப்பில்லை – 4 இலை
§ நசுக்கிய பூண்டு – 2 பல்
கடைசியில் தூவ :
§ கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :


v தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.
v பூண்டினை தவர கரைக்க கொடுத்துள்ள அனைத்தும் பொருட்களையும் 2 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கையினால் கலந்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து அடுப்பில் கொதி வரும் வரை வைக்கவும்.
v கொதிக்க வரும் சமயம் ,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ரசத்தில் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
v கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவவும். இப்பொழுது சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.

குறிப்பு :

வேண்டுமானால் எலுமிச்சை தோலினை சிறிதளவு சேர்த்து ரசத்தில் போடலாம். அது ஒரு தனி சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com