Tuesday, February 15, 2011

காங்கிரஸ் விளக்கம் : தேமுதிகவுடன் கூட்டணியா?


அதிமுக அணியில் தே.மு.தி.க., சேரும் என்று கூறப்பட்டாலும், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகளை இது வரை இருகட்சிகளும் வெளியிடவில்லை. 

தேமுதிக தரப்பினர் அழகிரி மூலமாக திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் முயற்சிகள் நடப்பதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான கட்சியின் முக்கிய பிரமுகர்  டில்லியில் முகாமிட்டுள்ளார் என்றும்,

ராகுல்காந்தியின் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தேமுதிக பிரமுகரை  டில்லி விமான நிலையத்திற்கே வந்து ராகுலுக்கு நெருக்கான பிரதிநிதிகள் அழைத்து
சென்றதாகவும் கூறப்பட்டது.

 இதனால், அ.தி.மு.க. - தி.மு.க., கூட்டணிகளுக்கு போட்டியாக தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா என்ற பரபரப்பு உண்டானது.

தேமுதிகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? என்ற சந்தேகங்களுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.   ‘’தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி வதந்தி’’ என்று காங்கிரஸ் நிர்வாகி மணிஷ் திவாரி விளக்கமளித்துள்ளார்.  

அவர் மேலும்,   ‘’தொகுதி பங்கீடு பற்றி மற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com