Tuesday, August 2, 2011

விலைவாசி உயர்வு: எதிர்கட்சிகள் அமளி: ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு சம்மதம்

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய அலுவல் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெபடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆளும்தரப்பு மற்றும எதிர்கட்சிகள் இடையே நடந்த பேச்சின்போது இந்த சமரசம் ஏற்பட்டது. நாளை ( புதன்கிழமை ) காலை 11 மணிக்கு லோக்சபாவில் இந்த விவாதம் துவங்குகிறது.


நேற்று இரங்கல் தீர்மானத்துடன் முடிந்த இந்த அவை இன்று மீண்டும் கூடிய போது பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் விலைவாசி உயர்வு மற்றும் ஸ்பெகட்ரம் ஊழல்,காமன்வெல்த் ஊழல் புரிந்த கல்மாடி நியமனம் குறித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடும் கூச்சல் நிலவியது. இதனையடுத்து ராஜ்யசபாவும், லோக்சபாவும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் துவங்கியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக இன்றும் சபாநாயகர் மறைந்த உறுப்பினர்கள் பெருமைகளை எடுத்துக்கூறினார். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரது பங்கு குறித்து அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளன. மேலும் காமன்வெல்த் ஊழலில் சிக்கியிருக்கும் கல்மாடிக்கு பிரதமர் ஆதரவு தெரிவித்தாரா என்றும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்பது பா.ஜ.,வின் கோரிக்கை. ஆனால் காங்கிரஸ் விவாதத்திற்கு ஒப்புதல் தரலாம், ஓட்டெடுப்பு கூடாது என்று கூறியிருந்தது. எப்படியோ இன்று 2 வது நாள் பார்லி.,யில் எந்த பணியும் நடக்காமல் முடிந்தது.

இடது சாரி வலியுறுத்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சீத்தாராம்யெச்சூரி பார்லி.,க்கு‌ வெளியே நிருபர்களிடம் பேசுகையில்: ஆளும் மத்திய அரசு பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்‌த்தியிருக்கிறது. இது தொடர்பாக கடந்த கால கூட்டத்திலும் எவ்வித உறுதியும், முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும். இது வரை அவை நடவடிக்கையில் பங்கேற்க மாட்டோம் என்றார்.

இன்று மாலையில் நடந்த பேச்சின்போது மத்திய அரசு விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த ஒத்துக்கொண்டது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com