Saturday, January 22, 2011

காதலித்து பார்

அந்த வானம்
கை தொடும் தூரம்தான்
இந்த பூமி
கால் கடக்கும் அளவு தான்
உலகம் உன்னை சுற்ற
நீ அவளை சுற்றுவாய் ,
காரணம் என் உலகம்
அவள் தான் என்பாய்!
காதலித்து பார் !!.....

முதல் முறை
உன் குளியலறையில் ,
உடலோடு சேர்ந்து
உன்
உயிரும் நனையும் ?
நீயும்
காதலித்து பார் !!

அதிகாலை எழுவாய்
ஆலயம் செல்வாய்
அங்கு
கடவுள் காணாமல் ,
அவள்
கால்தடம் காத்து நிற்பாய்!
நான் வழிபடும் (காதல்) கடவுள்
அவள் தான் என்று சொல்வாய் !
காதலித்து பார் !!!

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com