Tuesday, February 22, 2011

செட்டிநாட்டு வத்த குழம்பு..


சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன்
வெங்காயம் - 3
பூண்டு- 10 பல்
தக்காளி - 1
சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன்
புளி எலுமிச்சை உருண்டை அளவு
உப்பு- தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய் - 5 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு..

செய்முறை..

வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...சுண்டைக்காய் வற்றல் வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு சிவக்க வதக்கி ..வதங்கியவுடன் புளியை அந்த உப்பு நீரில் கரைத்து ஊற்றி சாம்பார் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும்.. கெட்டியான பக்குவத்தற்கு வந்தவுடன் இறக்கவும்..

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com