Saturday, February 12, 2011

பெண்களின் கண்ணீர் ஆண்களை செயலிழக்கச் செய்துவிடுகிறது


இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருந்து பெண்களின் கண்ணீர் ஆண்களின் ஓமோனான ரெஸ்ரொஸ்ரெனில் வீழ்ச்சியை ஏற்படுத்தி ஆண்களை பெண்கள் வசப்படுத்திக் கொள்ளச் செய்கிறதாம். அதாவது ஆண்களைச் செயலிழக்கச் செய்துவிடுகிறதாம்.

உப்பு நீரையும் பெண்களின் கண்ணீரையும் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் பெண்களின் இந்தக் கண்கட்டி வித்தை வெளிப்பட்டு இருக்கிறது.

அதுதான் கண்களில் கண்ணீர் முட்டையை நிரப்பிக் கொண்டு திரியிறவையோ..??!

பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் - புதிய ஆய்வு முடிவுகள்


காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம் ஈர்ப்பும் , காதலும் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆராய்ச்சிக்காக காதல் வயப்பட்ட பெண்கள் 3000 பேரை சோதித்ததில் அவர்களின் பெரும்பான்மையானோர் ஏமாற்றுவதில் கில்லாடிகள் என்பது தெரிய வந்துள்ளது. 35 முதல் 40 வயது வரை உள்ள பெண்களே அதிகம் ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் கோடீஸ்வரனான கதை

தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை ‘குரல்’ அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார்.

மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார்


உலக புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டதுதான் அவரது சாவுக்கு காரணம் என குடும்ப டாக்டர் முர்ரே மீது புகார் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி மைக்கேல் பாஸ்டார் முன்னிலையில் நடந்தது. அப்போது, மைக்கேல் ஜாக்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் ரோஜர்சிடம் டாக்டர் முர்ரேயின் வக்கீல் மைக்கேல் பிளானாகன் குறுக்கு விசாரணை செய்தார்.
 
2010-2011 www.christosebastin.blogspot.com