Saturday, February 12, 2011

போதைப் பொருள் கடத்திய புறா!


புறாவின் காலிலும், கழுத்திலும் கட்டி தூது விட்டது அந்தக்காலம். தற்போது ஜெயிலுக்குள் போதைப் பொருள் அனுப்பிவைப்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது.

கொலம்பியாவின் வடபகுதி நகரான புகாரமங்காவில் தான் இந்த வினோத முறை பின்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறைக்குள் 45 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட புறா பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டது.

பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கடந்த ஒன்பது மாத காலத்தில் தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.


குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரரகளுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல்


பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.


இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது _


ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.
 
2010-2011 www.christosebastin.blogspot.com